ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

அபூ  அப்துல்லாஹ்:

நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்; அதிகமாக நடக்க கூடாது, வீட்டு வேலைகளை முற்றிலும் செய்யக்கூடாது, போன்ற ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு விதிப்பது வழக்கம். ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், வழக்கமான உடற்பயிற்சியை நிறுத்திவிடக் கூடாது என்றும் அமெரிக்க மருத்துவ ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.

அவ்வாறு சுறுசுறுப்புடன் இருப்பதும், தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், பிறக்கும் குழந்தைக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும் என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அதேநேரத்தில், எவ்வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை உரிய மருத்துவர்களின் ஆலோசனையில் மூலம் பெறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களின் உடல்நிலையும் வேறுபட்டு காணப்படுவதால், அவர்களுக்கு ஏற்றவாறான உடற்பயிற்சிகளை மருத்துவர்களின் அறிவுரையின் மூலமாக அறிந்துகொள்ள வேண்டும்.

 

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்