ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– அபூ  அப்துல்லாஹ் :

ஆதமுடைய மகன் ”என்னுடையது என்னுடையது” என்கிறான் ஆதமுடைய மகனே! நீங்கள் உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் பிறருக்குக் கொடுத்ததையும் தவிர வேறு எது உன்னுடையது? என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னுஷ்ஷிக்கிர்(ரலி), முஸ்லிம்

”பெருமளவுக்கு பொருட்களைப் பெறுவது செல்வமன்று, போதுமென்ற மனமே பெரும் செல்வமாகும்” என நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

”மனிதர்களில் எவரிடமும் கேட்பதில்லை என்று யார் உறுதி எடுத்துக் கொள்கிறீர்களோ அவருக்காக சுவர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள்?. ”நான்” என்று கூறினேன். இதன் பிறகு அவர் எவரிடமும் எதனையும் யாசித்ததில்லை. ஸவ்பான்(ரலி): அஹ்மத், நஸயீ, அபூதாவூத்

”யார் தனக்கேற்பட்ட வறுமையை மக்களிடம் கொண்டு செல்கிறாரோ அவரது வறுமை நீங்கி விடுவதில்லை. எவர் அதை அல்லாஹ்விடம் கொண்டு செல்கிறாரோ உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கக் கூடும்” என நபி(ஸல்) கூறினார்கள். இப்னு மஸ்வூது(ரலி) : அபூதாவூத், திர்மிதீ

”உங்களை விட கீழே உள்ளவர்களைப் பாருங்கள்! உங்களைவிட மேலே உள்ளவர்களைப் பார்க்கதாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட் கொடைகளை நீங்கள் மறவாமலிருக்க இதுவே ஏற்ற வழியாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

பள்ளிவாசல் திண்ணையையே தங்கள் இருப்பிடமாக கொண்டு வாழ்ந்த எழுபது நபித்தோழர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு போர்வையோ அல்லது ஒரு வேஷ்டியோ, அல்லது மேல்துண்டோ தான் இருந்தன, அதையே ஆடையாக தங்கள் கழுத்துகளில் கட்டிக் கொள்வார்கள். (கழுத்து முதல்) பாதிக்கால் வரையிலும் சிலரது ஆடைகள் இருந்தன. மற்றும் சிலரது ஆடைகள் கரண்டைக் கால்வரை இருந்தன. அந்த ஆடை விலகி தங்கள் மறைவிடங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தங்கள் கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுத்துறங்கினார்கள். அவர்கள் எழுந்த போது அவர்களின் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. (அதைக்கண்ட) நாங்கள் ”அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு மென்மையான விரிப்பை நாங்கள் செய்து தரலாமா?” என்று கேட்டோம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது? மரத்தடியில் இளைப்பாறி விட்டு அந்த மரத்தைவிட்டுச் செல்லக்கூடிய பயணிக்கும் அந்த மரத்திற்கும் உள்ள உறவே” எனக்கும் இந்த உலகத்திற்கும் உள்ளது, என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரலி) : திர்மிதீ

பிறரிடம் யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன் மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது முகத்தில் சதையற்றவனாக வருவான் என்பது நபிமொழி இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்