ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

1) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன், கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)   விளக்கம்:கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பது சிறந்ததாகும். அது இல்லையென்றால் சாதாரண பேரீத்தம் பழம் அதுவும் கிடைக்கவில்லையென்றால் சில மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்