ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– சிபாயா ஸமான்

செல்வமும், குழந்தைகளும் உங்கள் சோதனைப்பொருட்களே(குர்ஆன்). தாயும் குடும்பமும் குழந்தையின் முதலாவது சூழலாக அமைகின்றன. குழந்தையின் வாழ்வு, பாதுகாப்பு, அன்பு முதலிய தேவைகள் அடிப்படைத் திருப்தி நிலையிலாவது குழந்தைகளுக்கு வழங்கப்படல் வேண்டும். ஒருவர் மீது மற்றவர் தங்கியிருக்கின்றனர் என்ற உணர்வு குடும்பத்தால் வளர்க்கப்படுதல் முக்கியமானதாகும். இந்த நம்பிக்கை குழந்தைகளின் உளச் சமூக வளர்ச்சியில் அவசியமானதொன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.

குடுப்பச் சூழலியற் காரணிகளும் குழந்தை வளர்ச்சியிலே செல்வாக்கு செலுத்துகின்றன. குடும்ப வசதிகள், சுத்தம், நெருக்கம், குடும்ப உறுப்பினர்களின் மொழிப்பிரயோகம் நடத்தைகள், பொழுது போக்குகள் போன்ற பல்வேறு அமைப்புகள் இவற்றில் அடங்கும் மேலும் குழந்தை வளர்ப்பு முறை தாய் தந்தையரின் முதிர்ச்சிப் பண்புகள், குழந்தையின் சகோதரர்களுக்கிடையே காணப்படும் வயது வீத்தியாசம், குடும்பத்தில் காணப்படும் கட்டுப்பாட்டு முறைகள் போன்றன குழந்தையின் வளர்ச்சியிலே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர்களைப்பின் பற்றியே குழந்தைகள் தான்கானும் ஆண் மாதிரிகையை(Male Model) உருவாக்கிக் கொள்ளுகிந்றது. அவ்வாறு பெண் குழந்தைகளும் தங்களை மாற்றிக் கொள்ளுகின்றனர். எனவே இது விஷயத்தில் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் காலத்திற்குக் காலம் மாறிவரும் ஆடைகளைத் தெரிவு செய்யாமல் எமது மார்க்க அடிப்படையிலான ஆடைகளை தெரிவுசெய்து கொள்வது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

எமது ஒவ்வொரு குழந்தையும் இறைவன் எமக்கு வழங்கிய மிகப்பெரிய அமானித சொத்தாகும் . அவர்களை நாம் முறையாக வளர்த்து மீண்டும் அவனிடம் ஒப்படைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இது குறித்து நாளை மறுமையில் நாம் ஒவ்வொறுவரும் விசாரிக்கப்படுவோம் இன்ஷா அல்லாஹ். ஆக குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான அம்சங்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துதிருப்பது மிகவும் அவசியமானதாகும் அந்த வகையில்

1. குழந்தைக்கு முறையான ஆகாரம் தேவை:

போதிய அளவு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையும், சுத்தமானதாகவும், உடனுக்குடன் வீட்டிலேயே தயாரித்துக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பொதியில் அடைத்த (கயளவ கழழன) உணவுகளை கடைகளில் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை நாம் முடிந்தவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் எமது குழந்தைகளுக்கு பருகக் கொடுக்க வேண்டும். இது மூலை வளர்ச்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் உதவிபுரிகிறது. அத்துடன் கூடுதலாக பழங்கள், காய்கறி வகைகளையும் எமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வறுமை காரணமாக சிலர் குழந்தைகளை கருவிலேயே அழிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து இறைவன் திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

‘வறுமைக்குப் பயந்து நீங்கள் உங்கள்; குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். நிச்சயமாக அவர்களை கொலை செய்வது பெரும் குற்றமாகும்.(17:31)

குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் விஷயத்தில் கூட எம்மவர்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள். அவர்களுடைய சுய காரணங்களைக் காட்டி கடைகளில் விற்கும் பால் பவுடர்களை வாங்கி கொடுத்து ஏதோ அவர்களின் பசியைத்தீர்த்து விடுகிறார்கள்.

ஆனால் இறைவனோ அவனுடைய அருளை தாய்ப்பாலில் சுரக்கச் செய்கிறான். சுப்ஹானல்லாஹ். சீம்பால் என்று சொல்லப்படும் முதலில் சுரக்கப்படும் பாலை குழந்தை பிறந்ததும் கட்டாயமாக கொடுக்கப்படவேண்டும். இந்தப்பாலில் குழந்தைகளின் ஈரலில் சேமித்து வைக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அவர்களுக்கு வழங்குகிறது. இது கொழுப்பு குறைந்ததாகவும், புரதம், விட்டமின்கள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. எனவே 2வருடம் பாலூட்ட வேண்டும் அதன் பின் அதைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் 2வருடம் போனபின் தாய்பால் சுரக்கும் போது அதன் சக்தி குறைந்து அதிலுள்ள சோடியத்தின் அளவும் குறைந்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்தான் இறைவன் கிட்டத்தட்ட 2 வருடம் என தனது திருமறையில் (31:14,46:15) வரையறுத்துக் கூறியுள்ளான்.

2. தக்க பாதுகாப்புத் தேவை:

உள அடிப்படையிலான பாதுகாப்பு, உடல்சார்ந்த பாதுகாப்பு, உறுதியான சூழல் முதலியவை குழந்தைகளின் தேவையாக உள்ளன. மனித மணம் எப்பொழுதும் இச்சையின்பால் போகக்கூடியது. எனவே வெளியிலுள்ளவர்கள் தங்களின் பிள்ளளைகளை பாலியல் ரீதியில் தவறாக நடத்த வாய்ப்புகள் உண்டு இன்னும் வீட்டிலுள்ள வேலை செய்பவர்களாலும் இன்னும் அண்டை வீட்டில் விட்டுச் செல்லும்போதும் இது போன்று ஏற்பட வாய்ப்புண்டு. பாடசாலைபோகும் போதும் வரும் போதும் குழந்தைகளுக்கு இது விஷயத்தில் பாதுகாப்பு அவசியம் தேவையாக உள்ளது.

எனவே பாதுகாப்பு இன்மை தொடர்பாக எழும் பயம் பிள்ளளைகளின் மனதில் மாறாத வடுவாக மாறி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தம்மை ஒத்த வயதினருடம் உடல் அடிப்படையிலும் , உள அடிப்படையிலும் போட்டியிடமுடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது விஷயத்தில் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு நடந்து கொள்வதுடன் பிறரின் குழந்தைகளையும் தன் குழந்தையாக நினைத்து அன்பு காட்டப்பழகிக் கொள்ள வேண்டும்.

3.சுத்தம் பேனப்படல் வேண்டும்:

சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என்று நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் செயலில் மிகக் குறைவே என்றால் அது மிகையாகாது. சுத்தமாக இருப்பவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். இந்த வகையில் குழந்தைகளின் படுக்கை அறைகளில் தேவையில்லாத தூசிகளை அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே அவர்கள் தூங்கும்போது சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும் அத்துடன் தனது உடை சுத்தமாக உள்ளதா, அயன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பிள்ளை பார்க்க அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களின் சூ சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஒரு மனிதனின் சூ வை பார்த்தால் போதும் அவனின் சுத்தம் அப்படியே தெரியுமாம். எனவே இது மிகவும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டும்.

4.பிள்ளைகளின் நல்ல கல்வியும் நல்ல பயிற்சியும்:

ஏற்கனவே படித்த பிள்ளைகளின் பெற்றோரிடம், பாடசாலைகளின் தரத்தை அறிந்து எமது பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பாடசாலைகளைத்தெரிவு செய்ய வேண்டும். சிலர் நினைக்கிறார்கள் பள்ளிக்கூடக் கல்வி மட்டும் போதும் என்று. ஆனால் அப்படியல்ல, அது தவிர பெற்றோரும் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பது கடைமையாகும். கற்பதற்கு முந்திய ஓய்வு அல்லது கற்பதற்கு முந்திய தியானமும் கற்று முடிந்த பின்னர் ஒரு குறித்த அளவு ஓய்வும் நினைவாற்றலை மேம்படுத்த துனைபுரியும்.

தந்தையாரின் கல்வி, தாயாரின் கல்வி, குடும்ப உறுப்பின்ர்களின் கல்வி, கல்வி சார்ந்த ஊக்குவிப்புக்கள், குடும்பத்தின் சுமூக பொருளாதார கட்டுமானம் போன்றன இவர்களின் கல்வி வளர்ச்சியிலே நேரடியாக செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும். எது எப்படியாருப்பினும் எமது இறைவன் நாடியோருக்கு மட்டுமே கல்வி ஞானத்தை வழங்குகிறான். இதை பின்வரும் குர்ஆம் வசனம் உண்மைப்படுத்துகிறது. அவன் தான் நாடுவோருக்கு ஞானததை வழங்குகிறான், எவர் ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடையோர்தான் படிப்பினை பெறுவார்கள்.(2:269) இறைவனின் கருனையும் அருளும் எமது குழந்தைகளுக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் நாம் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என்று பிறார்த்தனை செய்யவேண்டும்.

5.குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அரவனைப்பு தேவை:

ஒவ்வொரு சிறு பிள்ளைக்கும் எமது பொற்றோரால் நாம் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம் என்ற உணர்வு இருக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் மத்தியில் முட்டாள், உதாவதவன் போன்ற தேவையில்லாத பேச்சுக்களைப் பேசக்கூடாது.  அவர்களுடன் நாம் நேரம் ஒதுக்கி விளையாட வேண்டும். அன்பை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். அவர்களின் உடல் நலத்திலே கவனம் செலுத்த வேண்டும் அவர்களின் நல்ல பன்புகளுக்கு உற்சாகமளித்தல் , அவர்களின் உணர்வுகளை மதித்து நடத்தல் போன்றன மிக முக்கியமானதாகும்.

இப்படி நாம் செயல்படும்போது அவர்கள் நினைக்கிறார்கள். நாம் நமது பெற்றோருக்குத் தேவையானவர்கள் என்றும், எம்முடன் அவர்கள் நல்ல அன்பாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள் என்றும் உணரத் தொடங்குவார்கள்.  எனவே தூங்கும் பிள்ளையை தட்டி எழுப்பாமல் கண்ணத்தில் முத்தம் கொடுத்து எழுப்புங்கள். ஏனெனில் முத்தத்தின் ஈரம் பிள்ளையின் கண்ணத்தில் பட்டு பாசத்தோடு அது எழும்புகிறது. அன்பு மற்றும் அரவனைப்பு கிடைக்கப் பெறாத சிறுவர்கள் அமைதி குலைந்துவர்களாகவும், இறுகிய உளப்பாங்கு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பெரியவர்களுக்கு மரியாதை செய்யாதவரும், சிறியவர்களுக்கு அன்பு காட்டாதவரும் நம்மைச்சார்ந்தவரல்ல என்ற நபிமொழியை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் செயற்படுவது குறைவாகவே இருக்கிறது.

சிறுபிள்ளைகள் செய்யும் தவறுகளை நாம் மிகவும் நுணுக்கமாக திருத்த முயல வேண்மு;.  அவர்களது உள்ளம் கண்ணாடி மாதிரி அது கீழே விழுந்தால் அப்படியே நொறுங்கிவிடும். வேறு பொருட்களை சில நேரம் சரிசெய்து பாவிக்கலாம் ஆனால கண்ணாடியை எப்படியும் சரி செய்து பாவிக்க முடியாது. அது போலத்தான் அந்தப் பிஞ்சு உள்ளங்களும் இருக்கிறது செய்யும் தவறுகளை அவர்கள் உணர்ந்து தாமாகவே விடும் அளவு நாம் மென்மையாக திருத்த முயற்சிக்க வேண்டும்.  இதற்கு பின் வரும் ஹதீஸ் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.  ஒரு முறை ஒழு செய்யுமிடத்தில் சிறு பிள்ளைகள் பிழையாக ஒழு செய்து கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட நபி(ஸல்)அவர்கள் நான் செய்வது சரியா? என்று பாருங்கள் என்று கூறி ஒழு செய்து காட்டினார்கள்.  இதை பார்த்துக்கொண்டிருந்த அனைத்துச் சிறார்களும் ஓஹோ… நாம் செய்ததுதான் பிழைபோலும் என்று நினைத்து ஒவ்வொருவரும் தம்மைத்திருத்திக் கொண்டனர்.

6.தெய்வீக உணர்வூட்டப்படுதல்:

எங்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் தாமாகவே எனது வேதமாகிய அல்குர்ஆனையும், ஆதார நூலாகிய ஹதீஸையும் வாசிக்க ஊக்கப்படுத்துவதுடன், அதைக் கற்று விளங்கிக் கொள்ள நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் மாலை நேரமானதும் அல்குர்ஆனில் ஒரு சிறுபகுதியை ஓதிவிட்டு அதன் பின்னர்தான் தமது ஹோம் வோர்க் செய்ய தொடங்க வேண்டும். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் இந்தமாதிரிப் பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.  ஏனெனில் தாய் தகப்பனிடமிருந்தே அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள்.  உங்களின் சரியான பாதையைக் கண்டு அவர்களும் உங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி வருவார்கள்.

பெற்றோர்கள் அவாகளிடம் கூற வேண்டும் அடிக்கடி நாம உங்களை நேசிக்கிறேன். ஆனால் என்னைவிட இறைவன் உன்னைக் கூடுதலாக நேசிக்கிறான். எனவே உனது தேவைகளை அவனிடம் கேட்டுக்கொள் அவன் கட்டாயமாக உனது பிரார்த்தனைகளை ஏற்றுக கொள்வான் என்று கூறி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். துஆ கேட்கும் முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் முதலில் அல்லாஹ்வைப்பற்றி நல்ல விளக்கமளிக்கவேண்டும் மாறாக அவர்கள் ஏதும் தவறு செய்தால் அல்லாஹ் பார்ததுக் கொண்டிருக்கிறான் அவன் உன்னை தீயால் சுட்டு விடுவான் என்றெல்லாம் அவனை ஒரு கொடுமைக்காரணாக சித்தப்படுத்த கூடாது. அவன் அன்பானவன் அரவனைக்கக்கூடியவன் என்று அவனது பன்புகளைச் சொல்லிக் கொடுத்து இறை நம்பிக்கையை அடிமனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும் யா அல்லாஹ் இச்சிறு குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் கொடுத்து விடுவாயாக!.

செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் எனினும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப்பலனுடையவையாகவும், அவனிடததில் நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன. அல்குர்ஆன் (18:46)

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்