ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

சாதாத்

அனைத்து சமுதாய மக்களையும் ஆட்டுவிக்கும் ஆட்கொல்லியாக புகைப்பழக்கம் உள்ளது. மனிதனின் உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் மதுவை தடை செய்தது போல் புகைப்பிடித்தல் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும் நேரடியாகத் தடை செய்யவில்லை என்று கருதி சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை உபகோகிக்கும் முஸ்லிம்கள் தாங்கள் தடைசெய்யப்பட்ட ஒரு செயலை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் புகைபிடித்து வருகின்றார்கள்.

புகைபிடித்தலை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று வாதிடவும் முஸ்லிம்களில் சிலர் வெட்கப்படுவது இல்லை. திருக்குர்ஆனும் நபிமொழியும் தடை (ஹராம்) செய்துள்ள செயல்களின் தன்மைகள் அனைத்தையம் தன்னகத்தே கொண்டுள்ள செயல்தான் புகைப்பிடித்தலாகும் என்பதில் சந்தேகமில்லை.

முழு மனித சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு உலகத்தில் உள்ள அனைத்து செயல்களின் வழிகாட்டியாக அமைந்துள்ளது திருக்குர்ஆன்.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் இன்னும் நன்மை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை   -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2: 195)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் இன்னும் நன்மை செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை   -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2: 195)

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 29)

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும்,பரிசுத்தமானவற்றையும்  உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனானவான் என்று அல்குர்ஆன் 2: 168 கூறுகின்றது.

தனக்குத்தானே அழிவைத் தேடித்தரும் அனைத்துச் செயல்களையும் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தடை செய்துள்ளன. புகைப்பிடிக்கும் மனிதன் தன்னை மெல்ல மெல்ல அழித்துக் கொள்கிறான் என்பதற்கு அடுக்கடுக்கான மருத்துவச் சான்றுகள் வந்தவண்ணம் உள்ளன.

புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, ஆண்மையின்மை, குறைபிரசவம், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு வழித்தடம் அமைத்துக் கொடுக்கிறது. இந்தப்பழக்கத்திற்கு அடிமையாகும் மனிதன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான் என்பதில் சந்தேகமில்லை.

அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் விஷம் உட்கொண்டு தன்னைத் தானே கொன்று விடுகிறாரோ அவர் நரக நெருப்பிலும் விஷத்தை உட்கொண்டு அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி விடுவார். அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) அவர்கள் நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்

புகைத்தலின் மூலம் மனிதர் உள்ளிலுக்கும் புகையில் நிக்கோடின், கார்பன், டார், கார்பன் மோனாக்ஸைடு, ஆர்செனிக் போன்ற கடும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்த நச்சுகள் உள்ளுறுப்புகளை நாசமாக்கி தவணை முறையில் உயிரைப் பறிக்கும். மேற்கண்ட திருக்குர்ஆன், நபிமொழியின்படி பார்த்தால் புகைப்பவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்பவர்கள் என்பதும் புகைப்பழக்கம் நரகிற்கு அழைத்துச் செல்லும் என்பதும் சந்தேகம் இல்லை. அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.

 

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்